தமிழக பள்ளிக்கல்வி துறையில் 45 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் 45 ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மேலும் 18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை பள்ளிக்கல்வி துறை இயக்குனர் எஸ். கண்ணப்பன் பிறப்பித்துள்ளார்.