உத்தரகண்ட் மலைத்தொடரில் பெங்களூரைச் சேர்ந்த நான்கு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் மலையில் சிக்கியுள்ளர். கர்வால் மலைத்தொடரில் உள்ள சஹஸ்ர தால் மாயாலி பாதையில் மலையேறுபவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மோசமான வானிலை காரணமாக மலையேற்றம் சென்றவர்கள் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. தற்போது அங்கு வந்துள்ள மீட்புப் படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியிலும், மலையில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.