தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது, கல்லூரி வாசலில் சில இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் அதிக அளவு சத்தம் எழுப்பி சாகசம் செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த போக்குவரத்து காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, கெத்து காட்டிய மாணவர்களை விரட்டிப் பிடித்து, அவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.