ம.பி: சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து 4 அழுகிய சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து, செப்டிக் டேங்கில் இருந்து 4 உடல்களை போலீசார் மீட்டனர். இறந்தவர்களில் இருவர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இருவரின் அடையாளம் காணப்படவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.