சிறுவன் பிடித்து வந்த 33 ஆமைகள் பறிமுதல்

53பார்த்தது
சிறுவன் பிடித்து வந்த 33 ஆமைகள் பறிமுதல்
விழுப்புரம் பானாம்பட்டு பகுதியில் இறைச்சிக்காக ஆமைகளை சிலர் கடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவரை வனத்துறையினர், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அவர் வைத்திருந்த சாக்குப்பையை கைப்பற்றி பார்த்தனர். அதில் 33 ஆமைகள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை விழுப்புரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர், ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது.

மேலும் 20 பேர் கடந்த சில மாதங்களாக பூம்பூம் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருவதும், இவர்களில் 17 வயதுடைய சிறுவன், புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதி நீர்நிலையில் இருந்து 33 ஆமைகளை பிடித்து வந்ததும் தெரியவந்தது.