புதுச்சேரியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், சென்னையைச் சேர்ந்த ஏழுமலை (32) என்பவருக்கும் இன்ஸ்டா மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று பெற்றோர் கண்டித்ததால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, ஏழுமலையை பார்க்க சென்னைக்குச் சென்றார். உடனே, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்த ஏழுமலை, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், சிறுமியை மீண்டும் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ளார்.