திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாத்தூர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான கிரானைட் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் கைப்பிடியுடன் கூடிய வெண்கல வாளும் கிடைத்துள்ளது. இது பிற்கால விஜயநகர காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. 1878-ம் ஆண்டு இந்திய புதையல் சட்டத்தின்படி, மண்ணில் ஒரு அடிக்கு கீழ் காணப்படும் எந்த பொருளும் அரசாங்கத்துக்கு சொந்தம் என்பதால் அரசிடம் சிலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.