திருப்பூர்: உடுமலை அருகே அமராவதி முதலைப் பண்ணையில் கடந்த ஞாயிறன்று திருச்செந்தூரில் இருந்து சுற்றுலா வந்த பயணி 3 சவரன் தங்க நகையை தவறவிட்டுள்ளார். இந்த நிலையில் உடுமலை பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சரவணன்கிரி, பிரதீஸ் ஆகிய இருவரும் முதலைப்பண்ணையை சுற்றிப் பார்த்தபோது அந்த நகை கீழே கிடந்துள்ளது. இதையடுத்து சிறுவர்கள் இருவரும் அதனை எடுத்து முதலைப்பண்ணை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நேர்மையான சிறுவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.