டெல்லியில் உள்ள நரேலா தொழிற்பேட்டையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.