கேரளாவின் கொச்சி அருகே ஆலுவாவில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆலுவா அருகே ஆதரவற்ற சிறுமிகளுக்கான அனாதை இல்லத்தில் இருந்தனர். 15, 16 மற்றும் 18 வயதுடைய சிறுமிகள், காணாமல் போன நிலையில், இன்று (ஜுலை 18) காலை 7.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காணாமல் போனவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரிக்கின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சிறுமிகளை தேடி வருகின்றனர்.