தவெக சார்பில் இன்று 2ஆம் கட்ட கல்வி விருது விழா

50பார்த்தது
தவெக சார்பில் இன்று 2ஆம் கட்ட கல்வி விருது விழா
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2024ஆம் ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் பாராட்டி வருகிறார். கடந்த மாதம் 28ஆம் தேதி முதற்கட்டமாக சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக இன்று ஜுலை 3ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்ட மாணாக்கர்களுக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி