தமிழகத்தில் நேற்று இரவு பிறை தென்படாததால் வருகிற 16ஆம் தேதிக்கு பதில் 17ஆம் தேதி மிலாடி நபி விழா கொண்டாடப்படும் என அரசு காஜி முஜிபுர் ரகுமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஹிஜ்ரி 1446 ரபீ உல் அவ்வல் பிறை தென்படாததால் ஸ்பர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 06-09-24 வெள்ளிக்கிழமை அன்று ரபீஉல் அவ்வல் பிறை 1 என்றும் ரபீஉல் அவ்வல் பிறை 12 ஆன 17-09-24 அன்று மிலாடி நபி தினம் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.