2வது திருமணம்.. கொலை முயற்சியில் மிஸ்ஸான மாமா

67பார்த்தது
2வது திருமணம்.. கொலை முயற்சியில் மிஸ்ஸான மாமா
சிவகங்கை மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் 4 வருடங்களுக்கு முன்பு பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா 2 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை தொடர்ந்து, விஜய் கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த பவித்ராவின் சகோதரர் வேல்பாண்டி, அவரது நண்பர்களுடன் சேர்ந்து விஜய்யின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது விஜய் வீட்டில் இல்லாததால், அவரது சித்தப்பா வேல் முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் வேல்பாண்டி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி