TVS Apache RTR 160 - கருப்பு நிற வேரியண்டில் அறிமுகம்

50பார்த்தது
TVS Apache RTR 160 - கருப்பு நிற வேரியண்டில் அறிமுகம்
டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மாடலை புதிய கருப்பு நிற வேரியண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அப்பாச்சியில் 159.7சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 15.82bhp மற்றும் 13.85Nm மற்றும் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் குரல் உதவியுடன் TVS SmartXonnect கொண்டு வரப்பட்டுள்ளது. TVS Apache RTR 160 2V பிளாக் எடிஷனுக்கான விலை ரூ.1,20,420 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இந்த பைக்கானது பஜாஜ் பல்சர் என்எஸ்160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் பல்சர் என்160 ஆகியவற்றுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி