கடந்த 5 ஆண்டுகளில் யானைத் தாக்குதலில் 2,853 பேர் உயிரிழந்துள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டில் 628 பேர் இறந்துள்ளனர், இது இந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமாகும். 2019ஆம் ஆண்டில் யானைகளால் 587 இறப்புகளும், 2020இல் 471 இறப்புகளும், 2021இல் 557 இறப்புகளும், 2022இல் 610 இறப்புகளும், 2023இல் 628 இறப்புகளும் யானைகளால் ஏற்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.