2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்- நீடா அம்பானி நம்பிக்கை

72பார்த்தது
2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்- நீடா அம்பானி நம்பிக்கை
2036ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் நீடா அம்பானி கூறியுள்ளார். ஒலிம்பிக் நடைபெறும் பாரிஸில் இந்தியா ஹவுஸை திறந்து வைத்து பேசிய நீடா அம்பானி, "ஒலிம்பிக் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா ஹவுஸ், ஒலிம்பிக்கை இந்தியா நடத்துவதற்கான விருப்பத்தின் அடையாளம். ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவுக்கென பிரத்யேகமாக ஒலிம்பிக் இல்லம் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி