பஞ்சாபில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து (வீடியோ)

77பார்த்தது
பஞ்சாபில் இரண்டு ரயில்கள் இன்று காலை (ஜுன் 2) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஃபதேகர் சாஹேப் பகுதியில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டன. அதிகாரிகளின் கூற்றுப்படி, இன்று அதிகாலையில் சரக்கு ரயிலின் இஞ்ஜின் தடம் புரண்டு பயணிகள் ரயிலுடன் மோதியது. அமிர்தசரஸ்-டெல்லி ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் ஒடிசாவின் பாலாசோரில் நடந்த அதிபயங்கர ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி