“ஜகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும்” - இபிஎஸ் காட்டம்

67பார்த்தது
புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளை நடப்பதாக புகார் கொடுத்த முன்னாள் ஒன்றிய அதிமுக கவுன்சிலரான ஜகபர் அலியை லாரி ஏற்றிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: polimernews

தொடர்புடைய செய்தி