புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடிய மக்கள், மீண்டும் எப்போது விடுமுறை வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அந்த வகையில், அடுத்த விடுமுறை நாளான குடியரசு தினம் ஜன,26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழையில் வருகிறது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 11ஆம் தேதி தைப் பூசம் வருகிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால், தொடர் விடுமுறைக்காக காத்திருப்பவர்கள், ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.