ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக அவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் நேற்று (ஜன. 19) வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சிந்தன் நகர், ஜீவா நகர் பகுதிகளில் அனுமதி பெறாமல் சீதாலட்சுமி பிரசாரம் செய்ததற்காக கருங்கல்பாளையம் போலீசார் இன்று (ஜன. 20) வழக்கு பதிந்துள்ளனர்.