பரந்தூரில் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் இன்று (ஜன. 20) சந்திக்கும் நிலையில் இந்த நிகழ்வில் தவெக தொண்டர்கள் மற்றும் வெளிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பரந்தூர் சென்ற தவெக பொருளாளர் வெங்கட்ராமனின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அனுமதித்த வாகனங்களின் பட்டியலில் வெங்கட்ராமன் வாகனம் இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.