
TN: மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு.. பணம், நகை கொள்ளை
கிருஷ்ணகிரி: அட்டகுறுக்கி கிராமத்தை சேர்ந்த முனிசந்திரப்பா, நாகம்மா (65) என்பவரது 2 மகள்களை திருமணம் செய்துள்ளார். மருமகன் வீட்டில் நாகம்மா வசித்து வந்தார். நேற்று (மார்ச். 19) இவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த கொள்ளையர்கள் அவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு 20 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்ததோடு வீட்டுக்கும் தீவைத்துவிட்டு தப்பினர். போலீஸ் விசாரிக்கிறது.