
PAK vs NZ: 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
கராச்சியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது. 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்தின் வில் மற்றும் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.