

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி
தருமபுரி: வேதராம்பட்டியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கம்பைநல்லூர் அடுத்த சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் நாட்டு வெடி தயாரிக்கும் கிடங்கில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளர்கள் திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.