கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் திருநங்கை சங்கவி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷெரிப் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் திருநங்கை சங்கவி வாடகைக்கு இருந்து வந்துள்ளார். முறையான வாடகை தராமல் தகராறு செய்துவந்துள்ளார். இதனை விசாரிக்க சென்ற சக திருநங்கைகளையும், சங்கவி தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த திருநங்கைகள், சங்கவியை அடித்துக் கொன்றனர். இந்த வழக்கில் ஷெரிப் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.