தர்மபுரி மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளரான தடங்கம் சுப்பிரமணி நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக தர்மசெல்வன் நியமிக்கப்பட்டார். கடந்த மக்களவை தேர்தலில் தர்மபுரியில் திமுக வென்றாலும் சுப்பிரமணி பொறுப்பு வகிக்கும் பென்னாகரத்தில் பாமக அதிக ஓட்டு பெற்றது. இதோடு மாவட்டத்தில் கோஷ்டி உருவாக சுப்பிரமணியே காரணம் என திமுக தலைமைக்கு புகார்கள் சென்றதால் பதவி பறிக்கப்பட்டுள்ளது.