அப்போது தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெறும் கை, கால்களால் கழிவு நீரில் நின்றவாறு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்ட போது, அனைத்து தூய்மை பணியாளருக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஏன் இவ்வாறு ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.