இந்த எருது விடும் விழாவில் வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்டாம்பள்ளி, மிட்டூர், ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வாணியம்பாடி என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திர மாநிலம் குப்பம், உளிட்டா போன்ற பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின்னர் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீரி பாய்ந்து ஓடின. இதில் குறைவான நேரத்தில் இலக்கை சென்றடையும் காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனம், இரண்டாவது பரிசாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டி, மூன்றாவது பரிசாக ஹோண்டா சைன் இருசக்கர வாகனம் என 50 பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு