புதுக்கோட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய புகாரில், நகர போலீஸ் ஸ்டேஷனுக்கு விக்னேஷ்வரன் என்ற இளைஞர் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர் போலீஸ் ஸ்டேஷனில் உயிரிழந்தார். இதனையறிந்த குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்திய நிலையில், இது 'லாக்-அப்' மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.