பனங்கற்கண்டு இருமல், மார்புச்சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணப்படுத்துகிறது. பனங்கற்கண்டை வாயில் போட்டுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால் வாய்ப்புண், வாய் துர்நாற்றம் முற்றிலுமாக நீங்கும். பனங்கற்கண்டில் மிளகு, பாதாம், சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு ரத்த அழுத்தம் சீராகும் என்றும் சொல்லப்படுகிறது.