அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் கட்சி நிர்வாகிகளை நேற்று அவர் சந்திக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து சேலம் வந்த அவர், தொடர்ந்து அடுத்தடுத்து கட்சி நிகழ்ச்சிகள், கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் சகலந்து கொண்டார். பின்னர் சேலத்தில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பிய அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.