திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன் தொண்டர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “நமக்குள் இருக்கும் பிரச்னைகளை மறந்துவிட்டு நாம் ஒற்றுமையாக இருப்போம். நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை வீழ்த்த ஆட்கள் இல்லை, உரிமைகளை மீட்டெடுத்த இயக்கமான அதிமுகவில் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருப்போம்” என அறிவுரை வங்கியுள்ளார்.