இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக இருந்தவர் வீரேந்தர் சேவாக். தற்போது அவரது மகன் ஆரியவீர் சேவாக், கூச் பிகார் கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்கி, மேகாலயாவுக்கு எதிராக 309 பந்துகளில் 297 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 51 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். மகனின் ஆட்டத்தை பாராட்டிய சேவாக், 23 ரன்களில் ஃபெரார்ரி காரை தவறவிட்டதாக கிண்டலாக X-ல் பதிவிட்டிருந்தார். தனது 319 ரன்கள் சாதனையை முறியடித்தால் தன் பிள்ளைகளுக்கு ஃபெரார்ரி கார் அளிப்பேன் என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.