குருபெயர்ச்சிக்கு புகழ்பெற்ற திட்டை திருக்கோவில்

பிரளய காலத்தில் உலகம் நீரால் சூழப்பட்ட போது சீர்காழி மற்றும் திட்டை பகுதிகள் மேடாக காட்சி அளித்தன. சிவதலங்களும் பாதிக்கப்படவில்லை. எனவே சீர்காழியை வடதிட்டை எனவும், வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென்குடித்திட்டை எனவும் மக்கள் அழைக்கலானார்கள். இந்த கோயிலில் இறைவன் சுயம்புவாக அருள் பாலித்ததால் இவருக்கு ‘தான் தோன்றீஸ்வரர்’ என்றும், வசிஷ்ட முனிவர் வழிபட்டதால் 'வசிஷ்டேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியாக உலகநாயகி அம்மை அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 15வது திருத்தலம் இதுவாகும்.

தொடர்புடைய செய்தி