தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த ஒரு சில இயக்குநர்களில் முக்கியமானவர் கே.எஸ்.ரவிக்குமார். இவரின் மனைவி பெயர் கற்பகம் ரவிக்குமார். கே.எஸ்.ரவிக்குமார் - கற்பகம் தம்பதிகளுக்கு ஜஸ்வந்தி, ஜனனி, மாலிகா என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இருவர் மருத்துவத்துறை மற்றும் அழகு சாதனம் தொடர்பான பணியில் உள்ளனர். மற்றொரு மகளான மாலிகா வாழ்க்கைக் கலை பயிற்சியாளர் ஆவார்.