மோடி வருகை வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது: டிடிவி

77பார்த்தது
மோடி வருகை வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது: டிடிவி
பிரதமர், விவேகானந்தர் இல்லம் வருவது வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி மோடியை கண்டு அச்சப்படுவதாக விமர்சித்தார். அவர் கூறும் போது, “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டது. அதனால் இது தேர்தல் விதிமீறல் என நினைக்க முடியாது என்றே கருதுகிறேன். மோடியை கண்டு பயப்படுகிறார்கள். அதனால் தான் அவரின் செயல்பாடுகளை எதிர்க்கிறார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி