பிரதமரை 48 மணி நேரத்தில் தேர்ந்தெடுப்போம்: ஜெய்ராம் ரமேஷ்

78பார்த்தது
பிரதமரை 48 மணி நேரத்தில் தேர்ந்தெடுப்போம்: ஜெய்ராம் ரமேஷ்
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெளிவு வரும். தேர்தல் முடிவுகள் வெளியாகி 48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி தேர்வு செய்யும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் இந்திய கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதால் பிரதமர் தேர்வு குறித்து முடிவெடுக்க 48 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும் என்றார்.

தொடர்புடைய செய்தி