தமிழ் வருடங்களை 18 நொடிகளில் கூறி அரசு பள்ளி மாணவி சாதனை. விருதுநகர் மாவட்டம் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி கேசவர்த்தினி. இவர் 18 நொடிகளில் தமிழ் வருடங்களை கூறி ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவியை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.