திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கோம்பைபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்தது. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். ஆனால், நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமை இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்ற இடத்துக்குச் சென்று, சாக்குப் பையில் வைத்திருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து சாலையில் போட்டு உடைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற வத்தலகுண்டு போலீஸாரிடம் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனா். இதையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கே. உச்சப்பட்டியைச் சோ்ந்த திமுக நிா்வாகி சிவமணியை (41) போலீஸாா் கைது செய்தனா்.