தவிக்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அம்பானி கலந்துகொள்ளவில்லை. எனினும், காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள நிறுவனங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.