ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி

காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன நகரமான அஸ்-ஜவைதா மீது இஸ்ரேல் சனிக்கிழமை வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் குழந்தைகள். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர்நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பலியானவர்களில் ஒரு ஆண், அவரது இரண்டு மனைவிகள், அவர்களின் 11 குழந்தைகள் மற்றும் பிற உறவினர்கள் அடங்குவர்.

தொடர்புடைய செய்தி