சிறுவனை தீண்டிய கொடிய நாகம்.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்
புதுக்கோட்டையை சேர்ந்த நந்தகுமார் என்ற 13 வயது சிறுவனை கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்த நிலையில் 18 நாட்கள் போராடி அவன் உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். சிறுவனின் சிறுநீரக செயல்பாடுகள் குறைந்ததால் 5 கட்டமாக டயாலிசிஸ் செய்யப்பட்டது. பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பிறகு சிறுவன் முழுமையாக குணமடைந்துள்ளான். அவனுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது.