புதுக்கோட்டையை சேர்ந்த நந்தகுமார் என்ற 13 வயது சிறுவனை கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்த நிலையில் 18 நாட்கள் போராடி அவன் உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். சிறுவனின் சிறுநீரக செயல்பாடுகள் குறைந்ததால் 5 கட்டமாக டயாலிசிஸ் செய்யப்பட்டது. பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பிறகு சிறுவன் முழுமையாக குணமடைந்துள்ளான். அவனுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது.