ஜாஹீர் உசேன் கொலை - ஒருவரை சுட்டுப் பிடித்த போலீஸ்

50பார்த்தது
ஜாஹீர் உசேன் கொலை - ஒருவரை சுட்டுப் பிடித்த போலீஸ்
நெல்லை: ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹீர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் இன்று துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்தனர். நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது அவர் போலீசாரை அரிவாளால் தாக்கியதால், துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஜாகீர் உசேன் பிஜிலி (60) நேற்று கொல்லப்பட்ட நிலையில், முன்னதாக இவ்வழக்கில் 2 பேர் சரணடைந்தனர்.

தொடர்புடைய செய்தி