தாங்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு வியூஸ் வரவேண்டும் என்பதற்காக யூடியூபர்கள் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இர்ஃபான் தனது குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்தது தவறான முன்னுதாரணமாகி இருக்கிறது. இதே போல டிடிஎஃப் வாசன், திருச்சி சாதனா, ரவுடி பேபி
சூர்யா, திவ்யா கள்ளச்சி போன்ற பல யூடியூபர்கள் வரம்பு மீறியும், சட்டங்களை மதிக்காமலும் ஆபாச பேச்சுக்களும் பேசி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அரசு இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.