மதுரை: நுாறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தால் நெல் சாகுபடியின் போது களை எடுப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் முறையிட்டனர். மேலும், “கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்று 2021ல் தள்ளுபடி அறிவிப்பு செய்தும் தள்ளுபடி வழங்கவில்லை. பெரியாறு பிரதான கால்வாய் 4வது பிரிவு வாய்க்காலில் சீமைக்கருவேல மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.