ராபர்ட் மெக்டொனால்ட் என்ற நபர் 1986-ல் 19 நாட்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்து சாதனை படைத்தார். இந்த சாதனையை கின்னஸ் அமைப்பு அங்கீகரித்தது, இவர் 453 மணி நேரம் 40 நிமிடங்கள் தூங்காமல் இருந்து உலகின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் மெக்டொனால்டின் சாதனைக்குப் பிறகு, நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதால் ஏற்படும் உடல்நலக் குறைவுகளை காரணம் காட்டி இதுபோன்ற சாதனைகளை அங்கீகரிக்க கின்னஸ் அமைப்பு மறுத்துவிட்டது.