சென்னை: மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்திய விசிக தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சிபிசிஐடி குற்றப் பத்திரிகையை தமிழக அரசும் ஏற்க கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.