சென்னை: எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு பெண் மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த 23ஆம் தேதி சம்பவ இடத்தில் நடத்திய அதிரடி சோதனையில், பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. மேலும், பாலியல் தொழிலை நடத்தி வந்த ரெஜினா (57) என்ற பெண்ணை கைது செய்ததோடு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வெளிமாநில பெண் மீட்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.