தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் தாமோதரன் (42). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த நவம்பர் 6ஆம் தேதி பழனிசெட்டிபட்டி அருகே ஓடும் முல்லை பெரியாறு அணை அருகே உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்தபோது ஆற்றில் தாமோதிரன் துணி துவைத்தபோது எங்கள் மீது அழுக்கு நீர் பட்டதால் அடித்துவிட்டு தப்பிச்சென்றோம் என கூறியுள்ளனர்.